May 23, 2025 12:10:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்துள்ள யாழ். பல்கலை. மாணவர்கள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து பதாதைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தியும், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரியும் வடக்கு, கிழக்கில் சிவில் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இலங்கையின் 73ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை கரிநாளாக அறிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினத்தை கரிநாளாக குறிப்பிட்டு பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் பகுதியில் பதாதைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.