October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் தமிழ் பேசும் மக்களைப் பிரித்தாளும் நடவடிக்கை இனியும் நடக்கக் கூடாது’: சுமந்திரன்

இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கின்ற ஒரே காரணத்திற்காக பேரினவாதத்தால் நாட்டை ஆட்சி செய்ய முயற்சிக்கின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் இரண்டாவது நாள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எண்ணிக்கையில் குறைவான மக்களைப் பிரித்தாளும் நடவடிக்கை இனியும் தொடரக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் மக்கள் எண்ணிக்கையில் மட்டுமே சிறுபான்மை என்றும் தாம் சிறுபான்மையன்றி, இந்த நாட்டு மக்களே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரினவாதத்தை மேலோங்க செய்து, தாங்கள் நினைத்தபடி 73 வருடங்களாக இந்த நாட்டை ஆட்சிசெய்து வந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் பேசும் சமூங்களாக வடக்கு, கிழக்கைத் தாயமாக கொண்டவர்களும் வட, கிழக்குக்கு வெளியே வாழ்ந்து வருகின்ற இஸ்லாமிய மற்றும் மலையக தமிழ் உறவுகளும் ஒன்றினைந்து பேரணியில் பயணிக்க வேண்டும் என்று சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நடைபயணம் தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமைக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்திருக்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.