
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று 146 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் நன்னடத்தையுடன் இருந்த 146 கைதிகளுக்கு நான்கு நிபந்தனைகளின் கீழ் இவ்வாறு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளில் தமது தண்டனைக் காலத்தின் அரைவாசியைப் பூர்த்தி செய்தவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் 25 வருடத்தைப் பூர்த்தி செய்தவர்கள், அரைவாசி தண்டனைக் காலத்தைப் பூர்த்தி செய்த இளம் கைதிகள் மற்றும் தண்டப் பணத்தைச் செலுத்த முடியாமல் உள்ளவர்களில், தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கே இன்று ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.