
கொவெக்ஸ் சலுகையின் கீழ் 4 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.
அதன் அடிப்படையில் அஸ்ட்ராஜெனகா கொவிஸீல்ட் தடுப்பு மருந்துகள் இலவசமாக கிடைக்கவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தென்கிழக்காசிய வலயத்திற்கான பிரதிநிதி, விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி முதல் கட்டமாக 30 வீத தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் கிடைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள பாலித்த அபேகோன்,
ஏனைய கொரோனா தடுப்பூசிகள், பல்வேறு கட்டங்களின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், 09 மில்லியன் அஸ்ட்ராஜெனகா கொவிஸீல்ட் தடுப்பூசிகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.