இலங்கையில் எதிர்க்கட்சியை வழிநடத்த மிகவும் பொருத்தமானவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
டெய்லி மிரர் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாரும் இருப்பதாக தாம் நினைக்கவில்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியில் இருப்பது அரசாங்கத்திற்கு பாதகமாக இருந்தாலும் அரசியல் ரீதியாக நோக்கும் போதே அவரே அந்த இடத்திற்குப் பொருத்தமானவர் என்று கூறியுள்ளார்.
அரசாங்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒரு வலுவான எதிர்க்கட்சி எப்போதும் தேவை என தெரிவித்த அவர் முந்தைய கூட்டு எதிர்க்கட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று சுட்டிக்காட்டினார்.
தற்போதைய எதிர்க்கட்சி பயனற்றது என்பதுடன் எதிர்க்கட்சியின் பிளவு ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி அல்ல என பிரதமர் மேலும் தெரிவித்தார்.