ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் மீதான வெறுப்பில், ஐநா அதன் துறைசாரா விடயங்கள் குறித்து, சாட்சியங்களும் இன்றி அறிக்கை தயாரித்துள்ள காரணத்தினாலேயே அரசாங்கம் அதனை நிராகரித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு, எழுத்துமூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐநா விவகாரம் தொடர்பாக இலங்கையின் நிலைப்பாடு இப்போது வெளிப்படுத்தப்படாது என்றும் வெளிவிவகார அமைச்சர் ஐநா பேரவையில் உரையாற்றும் போது அதனைக் கண்டுகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதினேழரைப் பக்கங்களைக் கொண்ட ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில், இரண்டரைப் பக்கங்களில் மாத்திரமே ஐநாவின் துறைசார்ந்த விடயங்கள் காணப்படுவதாக அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.