சென்னையில் கைதுசெய்யப்பட்ட பிரபல குற்றக் கும்பல் சந்தேகநபரான ‘கிம்புலா எல குணா’ மற்றும் அவரது மகனை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸாரினால் சர்வதேச பொலிஸாரின் ஊடாக விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கைக்கு அமைய, இந்திய பொலிஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘கிம்புலா எல குணா’ உட்பட நான்கு பேரை சென்னையில் கைதுசெய்திருந்தனர்.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை அழைத்து வர இரு நாடுகளுக்கும் இடையிலான கைதிகளைப் பரிமாற்றிக்கொள்ளும் ஒப்பந்தத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, வெளிநாடுகளில் மறைந்திருக்கும் மேலும் பல சந்தேக நபர்களையும் கைதுசெய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.