இலங்கையில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கென பிரத்தியேமாக வடிவமைக்கப்பட்ட இராணுவ சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவத்தில் அவர்கள் வகித்த தரநிலைகள், தனிப்பட்ட ஆளுமை மற்றும் படையணி ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் தேசிய நிகழ்வுகள், இராணுவ நிகழ்வுகள் அல்லது இராணு சார்பற்ற நிகழ்வுகளின் போது ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு அணியும் வகையிலேயே சீருடை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நிலையினரும் புதிய சீருடையை அணிவதற்கான அனுமதியை பெறுவர்.
அதேநேரம் ஓய்வுபெற்ற முப்படை தளபதிகள், முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஏனைய பதவி நிலையினர், மருத்துவ காரணங்களுக்காக இடைவிலகியவர்கள் ( 10 – 12 வருட சேவைக்காலங்கள்), வெளிநாடுகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளவர்கள், விசேட தேவைக்காக சேவைக்கு மீளமைக்கப்பட்டவர்களும் சட்ட திட்டங்களுக்கு இணங்க அதனை அணிய முடியும்.
இந்த புதிய சீருடைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று கொழும்பு பாதுகாப்பு கல்லூரியின் கேட்போர் கூடத்தில் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரட்ன தலைமையில் நடைபெற்றது.