
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மோசமாக உடற்பயிற்சி மட்டங்கள் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், மேற்கிந்தியத்தீவுக்கான சுற்றுப் பயணத்துக்கு வீரர்களைத் தெரிவுசெய்ய கடுமையான உடற்தகைமை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவு சுற்றுப்பயணத்திற்கு பட்டியலிடப்பட்ட அனைத்து வீரர்களும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை 8 நிமிடங்களும் 35 வினாடியில் ஓடி முடிக்க வேண்டும் என்ற விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மாதம் 5 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இந்த உடற்தகைமைத் தேர்வு நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்தகைமைத் தேர்வு இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய உடற்திறன் மேம்பாட்டு முகாமையாளர் கிராண்ட் லியுடன் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும் என்ற உடற்தகைமைத் தேர்வை இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளும் பின்பற்றி வருகின்றன.