May 23, 2025 0:29:59

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“வடக்கில் வன்முறைக் கும்பல்களை கட்டுப்படுத்துவோம்”: புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்

இலங்கையின் வடக்கில் இயங்கும் வன்முறைக் கும்பல்களை கட்டுப்படுத்த முப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றாவது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.

இன்று காங்கேசன்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனைகள், சட்ட விரோத செயற்பாடுகள், வன்முறை குழுக்களின் அடாவடிகள் அனைத்துக்கும் எதிரான நடவடிக்கைகள் தொடரும்.

இந்த குமுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமானது.

இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு தேவைப்பட்டால் முப்படைகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளவும் தயாராகவே இருக்கின்றோம்” என்றார் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்.