July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு பங்குச் சந்தை பரிவர்த்தனையில் வரலாற்று வீழ்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் பங்குப் பரிவர்த்தனை விலைச் சுட்டி, வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு இன்றைய தினத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.

பங்குகளின் விலைச் சுட்டி இன்று 561.75 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

நேற்றைய பரிவர்த்தனை முடிவில் 8,567.07 புள்ளிகளாக காணப்பட்ட அனைத்து பங்குகளின் விலைக் சுட்டி, இன்றை தினம் பரிவர்த்தனை முடிவில் 8005.32 புள்ளிகளாக காணப்பட்டது.

இதன்படி நாளாந்த விலைச் சுட்டிகளின் அடிப்படையில் ஒரே நாளில் விலைச் சுட்டி புள்ளிகள் அதிகளவில் வீழ்ச்சியடைந்த நாளாக இன்று பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் 2020 ஒக்டோபர் 5 ஆம் திகதி 462.99 புள்ளிகளால் நாளாந்த விலைச் சுட்டி வீழ்ச்சிடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.