January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்க வேண்டும்’

பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ்க் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்லிம்களும் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள் மற்றும் ஜனாஸா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்த கண்டன நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு சிறுபான்மையினர் என்ற வகையில், முஸ்லிம் சமூகமும் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்கின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, எமது சகோதர சமூகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நடைபவனிக்கு, முஸ்லிம் சமூகமும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென ரிஷாட் பதியுதீன் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம்  நாளையதினம் முன்னெடுக்கப்பட்டு எதிர்வரும்6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.