January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் கடற்தொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்களைக் காணவில்லை

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் கடற்தொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் சென்ற இவர்கள் இதுவரையில் கரை திரும்பவில்லை என மீனவர்களின் உறவினர்களால் இன்று மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் கொண்னையன் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கொட்வின் (38) மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர்.கண்ணன் (55), எஸ்.பாண்டியன் (23) ஆகிய மூன்று மீனவர்களுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர், கடற்தொழில் திணைக்களம் மற்றும் கடற்படை ஆகியோரிடம் மீனவர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து கடற்படையினர் கடலில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.