January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பு இடைநிறுத்தம்!

இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இடைநிலை வகுப்புகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிக்கும் முறைமையை மறுசீரமைப்புக்கு உட்படுத்த உள்ள காரணத்தினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி மறு அறிவித்தல் வரும் வரையில் மாணவர்களை அனுமதிக்கும் நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானங்களுக்கமைய தேசியப் பாடசாலைகளில் முதலாம் வகுப்பு தவிர்ந்த மற்றைய வகுப்புகளுக்கு இடையில் புதிதாக மாணவர்களை சேர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.