May 25, 2025 16:47:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் தேசிய கொடியில் உள்ள சிங்க உருவத்தில் திருத்தங்களைச் செய்ய நடவடிக்கை

இலங்கையின் தேசிய கொடியில் உள்ள சிங்க உருவத்தில் திருத்தங்களைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தேசிய கொடியின் சிங்க உருவத்தில் உள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்தே, இதுகுறித்து அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் உள்ளவர்கள் குறித்த குறைகளைச் சுட்டிக்காட்டி, திருத்தங்களையும் முன்மொழிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருத்த முன்மொழிவுகள் பொது நிர்வாக அமைச்சுக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், திருத்தங்களை மேற்கொள்வது நீண்ட செயன்முறையென்றும், அதற்கு பாராளுமன்ற அங்கீகாரம் தேவை என்றும் ஜெனரல் கமல் குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறை சுதந்திர தின நிகழ்வில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தேசிய கொடியே பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.