இலங்கையின் தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டு வந்த நிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, ஆளுநர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
ஆளுநர் வில்லி கமகே தேசிய தொற்றுநோய் சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரையில் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.