இலங்கையில் கொரோனா தொற்றால் முதன் முதலாக ஒரு மருத்துவர் உயிரிழந்துள்ளார்.
இந்த மருத்துவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, காலி- கராபிடிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
32 வயதுடைய மருத்துவர் கயான் தன்தநாராயண, கொழும்பு வடக்கு ராகம மருத்துவமனையில் பணியாற்றும் போதே, கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
கொரோனா தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட நியுமோனியா நோய் நிலைமையே மருத்துவரின் உயிரிழப்புக்குக் காரணமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவரின் குடும்ப உறுப்பினர்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இதேநேரம், மருத்துவரின் மரணத்துக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.