
இலங்கையின் பிரபல குற்றக் கும்பல் முக்கியஸ்தரான ‘கிம்புலாஎல குணா’ என்பவரும் அவரின் மகனும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பொலிஸாரினால் சர்வதேச பொலிஸாரின் ஊடாக விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கைக்கமைய இந்திய பொலிஸாரினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் தேடப்பட்டுவந்த குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘பும்பா’ எனப்படுபவரும் இந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று வெளிநாடுகளில் மறைந்திருக்கும் மேலும் பல குற்றக் கும்பல்களை சேர்ந்தவர்களை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.