
வவுனியா செட்டிக்குளம் முசல்குத்தி காட்டுப்பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
36 வயதுடைய குறித்த நபர் நேற்று மாலை 5 மணியளவில் முசல்குத்தி காட்டுப்பகுதிக்கு சென்றிருந்த போது அங்கு இனந்தெரியாதோரின் துப்பாக்கிச்சூட்டுக்கு அவர் இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் படுகாயமடைந்த அவர் பிரதேசவாசிகளினால் செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டைமேற்கொண்டவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிவரவில்லை.
சம்பவம் தொடர்பாக செட்டிக்குளம் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.