பாடசாலை மாணவர்களிடையே கொவிட் பரிசோதனைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எழுமாறான அடிப்படையில் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை நடாத்தப்பட உள்ளது என்றும் தினமும் இரண்டு அல்லது மூன்று பாடசாலைகளை சேர்ந்த 30 மாணவர்களுக்கு குறித்த பரிசோதனைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த பரிசோதனை நடவடிக்கைகள் மூலம் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த முடிவுகளை எடுப்பதற்கும் மாணவர்கள் மத்தியில் பரவுகின்ற கொரோனா வைரஸின் தன்மையைக் கண்டறியவும் வழிவகுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பில் உள்ள மூன்று பாடசாலைகளில் இந்த திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.