ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளினது ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் கட்டமாக இலங்கை அரசு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் இது தொடர்பில் இந்தியா பரிசீலித்து வருவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 15 நாடுகளின் ஆதரவை பெறும் நடவடிக்கைகளை இலங்கை அரசு முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவும் ரஸ்யாவும் ஏற்கனவே இலங்கைக்கு சர்வதேச அரங்கில் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.