கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் முழுமையாக முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
மேலும், மேற்கு கொள்கலன் முனையத்தை தனியார் நிறுவனமொன்றுடன் இணைந்து முன்னெடுப்பது எனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,குறித்து முடிவு எட்டப்பட்டுள்ளது.
அத்துடன்,கிழக்கு கொள்கலன் முனையத்தை மூன்று கட்டங்களில் அபிவிருத்தி செய்வதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ள அதேவேளை,மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஏற்கனவே இன்று நடைபெற்ற கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்களுடனான சந்திப்பின்போது,கிழக்கு முனையம் நூறு வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கடுப்பாட்டிலேயே இருக்கும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.