
File Photo
இலங்கையில் இன்றைய தினத்தில் 816 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 64,983 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 916 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 58,075 பேர் குணமடைந்துள்ளதுடன், 6,585 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
7 மரணங்கள் பதிவு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 323 ஆக உயர்வடைந்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேருக்கு தொற்று
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காத்தான்குடி, கல்முனை மற்றும் மூதூரைச் சேர்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கே இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.
அத்துடன், கம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த மேலும் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.