January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுபான்மை பிரச்சனைகள் தொடர்பில் மக்கள் காங்கிரஸ்- கருஜயசூரியவுடன் கலந்துரையாடல்

நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட உயர்பீட உறுப்பினர்கள் இன்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம், கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு இடம் பெறும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதற்காகவும், விசேடமாக முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் எதிர்ப்பினை வெளியிட்டமைக்கும், அவ்வமைப்புக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

அத்துடன், சிறுபான்மை சமூகம் தற்போது எதிர்நோக்கியுள்ள காணிப் பிரச்சனை, இராணுவ மயமாக்கல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன், சிரேஷ்ட பிரதித் தலைவர் சஹீட் மற்றும் பொருளாளர் ஹுசைன் பைலா ஆகியோர் கலந்து கொண்டனர்.