January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் தொடர் போராட்டம்

விடுதலைப் புலிகளுக்கு உதவியதாகக்கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் தொடர் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றதுடன் ஏ-9 பிரதான வீதியை மறித்து கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இன்று முதல் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் பந்தல் அமைக்கப்பட்டு தொடர் போராட்டமாக நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் போக்குவரத்தை முழுமையாக சீர் செய்வதற்கு ஒத்துழைக்குமாறு பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த கிளிநொச்சி தலைமை பொலிஸ் அதிகாரி  போராட்டக்காரர்களை  வீதியின் ஒரு பகுதிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.

This slideshow requires JavaScript.