January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கைக்கு எதிராக ஐநா டுவிட்டரில் போராட்டம்’: குற்றம்சாட்டுகிறார் வெளிவிவகார அமைச்சர்

ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கைக்கு எதிராக டுவிட்டரில் போராட்டம் மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன குற்றம்சாட்டியுள்ளார்.

ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மேற்கொண்டு வரும் டுவிட்டர் போராட்டத்தில் யுத்த கால காட்சிகள் உள்ளடங்கிய வீடியோக்களும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கடந்த கால மனித உரிமை மீறல்களைக் கவனிக்கத் தவறியதால், மீண்டும் மனித உரிமை மீறல்கள் நிகழும் அபாயம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடும் டுவிட்டர் பதிவொன்றை ஐநா, யுத்த கால வீடியோவுடன் வெளியிட்டுள்ளது.

குறித்த டுவிட்டர் செய்தி, இலங்கை விவகாரங்கள் தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளில் இருந்து முழுமையான விலகலாகும் என்றும் பக்கச்சார்பானது என்றும் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 19 வரையான ஐநா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை விவகாரமும் ஆராயப்படவுள்ளது.