வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக நான் களமிறங்க தயராகவுள்ளேன். எனினும் மாகாணசபை தேர்தல் நடத்தப்படுமா என்பதே சந்கேமாகவுள்ளது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் தற்போது ஜனநாயகம் பாரியளவில் கேள்வியாகியுள்ளது.
இந்நிலையில் எமது இருப்பை தக்கவைக்க போராடவேண்டியக் கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிங்கள மயமாக்கல், ஆக்கிரமிப்பு, இராணுவ கெடுபிடிகள் என அளவுக்கு அதிகமான நெருக்கடிகளை அரசாங்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாகாணசபை தேர்தலை நடத்தினால் தமிழரசுக் கட்சியின் சார்பில் என்னை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என ஏகமானதான கோரிக்கையை எமது தரப்பினர் முன்வைத்துள்ளனர்.
இதேநேரம் தமிழரசுக் கட்சியின் ஏகமனதான கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளேன். கட்சியின் உயர்மட்டக்குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ள போதிலும் சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி தீர்மானம் ஒன்றினை எம்மால் எட்ட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.