
(File Photo)
கொழும்பு துறைமுக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடவுள்ளன.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகாரசபையின் கீழ் கொண்டுவரும் வரை போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் தொழிற்சங்கங்கள் இறுக்கமான தீர்மானத்தில் உள்ளனர்.
இதேநேரம் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தி தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தொடர்ச்சியாக நான்காவது நாளாகவும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்தோடு தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளினால் அரசாங்கதிற்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடவுள்ளார்.