July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவது நல்ல விடயமே’

இந்தியாவுடனும் நாங்கள் நட்புறவைப் பேணவேண்டும். அந்தவகையில் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு உத்தேசித்துள்ளமை நல்ல விடயம் என கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

சமுதாய வேலைத்திட்டத்தின் கீழ் வீடு ஒன்றைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர்;

சட்டரீதியான பிரச்சினைகள் இருப்பதால் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் 51 வீதத்தை இலங்கை அரசும், வேறு முதலீட்டாளர்களிற்கு 49 வீதத்தையும் வழங்கினாலும் துறைமுகம் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கூறுவது போன்று கொரோனா தடுப்பூசிக்காகவே துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதாக கூறுவதில் உண்மையில்லை.

மேலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக புதிய ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டமை நன்மையான விடயம்.ஆட்சி மாறியுள்ள காரணத்தினால் நடந்த உண்மைகளை அறிவதற்காக அவ்வாறான குழுக்களை அமைத்து தகவல்களை பெற்றுக்கொள்ளவேண்டும். அந்தவகையில் இது வரவேற்கக்கூடிய விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.