அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபுக்கு எதிராக சட்டத்தரணி ஒருவரால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி இந்திக காலகே என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த அரசியலமைப்பு திருத்தத்தின் உள்ளடக்கங்கள் பல அரசியலமைப்புக்கு முரணான வகையில் இருப்பதாகவும், அத்துடன் சில விடயங்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தபட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த உள்ளடக்கங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அத்துடன் இதனை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியமானது என்றும் அறிவிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்திடம் கேட்டுள்ளார்.