February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை விடுவிப்பதற்கு தீர்மானம்

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பிரதேசங்கள் நாளை அதிகாலை 5 முதல் அதிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 100 ஆம் இலக்க தோட்டம், துறைமுக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென். அன்ரூஸ் பிளேஸ், சென். அன்ரூஸ் வீதி மற்றும் பேலியாகொட பொலிஸ் பிரிவில் கஹபட கிராம சேவகர் பிரிவில் 90 ஆம் இலக்க தோட்டம் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றைய பிரதேசங்கள் தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்று கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.