இலங்கையில் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி முதல் பிளாஸ்டிக், பொலித்தீன் பொருட்கள் சிலவற்றுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் அல்லது பொலித்தீனால் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்படவுள்ளது.
இதன்படி வியாபார அல்லது கைத்தொழில் நடவடிக்கைகளின் போது, பொதியிடலுக்கு பயன்படுத்தப்படும் 20 மில்லிமீற்றர் அளவுடைக்கும் குறைவான அல்லது 20 கிராமுக்கும் குறைவான சிறிய பொதிகள் (செசே பக்கட்) பயன்பாடு தடை செய்யப்படவுள்ளது.
அத்துடன் பலூன், பந்து மற்றும் நீரில் விளையாடக் கூடிய பொருட்கள் தவிர்ந்த காற்றடைக்கப்பட்ட ஏனைய பிளாஸ்டிக் பொருட்களுக்கும் மற்றும் பிளாஸ்டிக் காம்புகளுடன் கூடிய கொட்டன் பட்ஸ்களுக்கும் தடை விதிக்கப்படுமென வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.