
கிளிநொச்சி- உருத்திரபுரம் பகுதியில் உள்ள உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாகக்கூறி தொல்லியல் திணைக்களம் ஆராய்ந்து வருகின்றதாக அப்பகுதியில் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றையதினம் அப்பகுதிக்கு பௌத்த தேரர் ஒருவர் வருகை தந்ததாகவும் அவர் சென்ற பின்பு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வருகை தந்து அவ்விடத்தை பார்வையிட்டு சென்றதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, ஆலயத்திற்கு அருகில் தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாகவும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தொல்லியல் திணைக்களத்தினர் அண்மையில் குறிப்பிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் பதற்றமான நிலை காணப்படுவதுடன் ஏற்கனவே தொல்லியல் திணைக்களத்தால் அப்பகுதி அடையாளம் காட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.