January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கிழக்கு முனைய விவகாரத்தில் பின்வாங்கிய அரசு மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு கையளிக்க முயற்சி”

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக ‘சிங்ஹ லே’ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

நாடு பூராகவும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்கங்கள் மற்றும் தேசப்பற்றாளர்களின் ஆர்ப்பாட்டங்கள், அழுத்தங்கள் காரணமாக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கும் திட்டத்தில் அரசாங்கம் பின்வாங்கியுள்ளதாக ‘சிங்ஹ லே’ அமைப்பின் பொதுச் செயலாளர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு முனைய விடயத்தில் பின்வாங்கியுள்ள அரசாங்கம், தங்கையை காண்பித்து அக்காவை திருமணம் முடித்துக்கொடுப்பதை போன்று, கிழக்கு முனையத்தை காட்டி மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க முயற்சித்துள்ளதாக மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கொழும்புத் துறைமுக விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார்.