
File Photo
இலங்கையின் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இன்று அதிகாலை சிறியளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வு 2 ரிச்டர் அளவரில் பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
வலப்பனை, பசறை, மடுல்சீமை உள்ளிட்ட பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும், அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட அதிர்வு சில செக்கன்களுக்கு நீடித்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னரும் கடந்த 22 ஆம் திகதி இந்தப் பகுதியில் நில அதிர்வுகள் உணரப்பட்டிருந்தமையினால் பிரதேச மக்கள் மத்தியில் அச்ச நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
நில அதிர்வு தொடர்பாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அந்தப் பிரதேசங்களில் ஆய்வுகளை நடத்தி வருகின்றது.
இதேவேளை சில மாதங்களுக்கு முன்னர் கண்டி மாவட்டத்திலும் இதேபோன்ற நில அதிர்வுகள் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.