
இலங்கையின் பிரபல எழுத்தாளர் மறைந்த ‘மல்லிகை’ ஆசிரியர் டொமினிக் ஜீவா கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதியாகியுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
கடந்த 28 ஆம் திகதி 94 ஆவது வயதில் அவர் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், அவரின் உடலில் பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டிருந்தது.
இன்று வெளியாகிய பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதியானது.
இதனிடையே டொமினிக் ஜீவாவின் உடல் இன்று மாலை பொரளையில் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய தகனம் செய்யப்பட்டுள்ளது.