April 25, 2025 2:54:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை களமிறக்கத் தீர்மானம்

மாகாண சபைத் தேர்தலில் வடக்கு மாகாணத்தின் தமிழரசுக் கட்சி முதலமைச்சர் வேட்பாளராக  மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என அந்தக் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று தீர்மானித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு வவுனியாவில் இன்று கூடியது.

இந்தக் கூட்டத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா அவர்களே போட்டியிடவேண்டும் என முன்மொழிந்துள்ளார்.

இதன்போது எவரும் அந்த தீர்மானத்தை எதிர்க்காததால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.