இலங்கையில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் தொடர்பாக காண்காணிப்பதற்காக புதிய குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவுக்கான பெயர்களை பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அமைக்கப்படும் குழுவினர் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் முன்னேற்றங்கள் குறித்து காண்காணிப்பார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் தொடர்பாக வீரர்கள், பயிற்றுவிப்பாளர்களின் இணக்கப்பாட்டுக்கமையவே இந்தக் குழுவை அமைக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.