May 13, 2025 20:37:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் தையிட்டியில் விகாரை அமைக்க அடிக்கல் நாட்டினார் இராணுவத் தளபதி

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டியில் தனியார் காணியில்  பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சமய வழிபாடுகளுடன் நடைபெற்றது.

வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரையை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், விகாரைக்கான நிரந்தக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்க இன்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நடப்பட்டுள்ள

தையிட்டி பெண்கள் காவலரனுக்கு அருகாமையில் இந்த விகாரை தனியார் காணியில் அமைக்கப்படவுள்ளது.