கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு கையளிக்கும் திட்டத்திற்கு அரசாங்கத்திற்குள் அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் கிழக்கு முனையத்தை வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர், அவ்வாறாக அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டால் அதற்கு எதிர்ப்பு வெளியிட தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பாக இன்றைய தினத்தில் விமல் வீரவன்சவின் இல்லத்தில் அமைச்சர் உதயகம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண உள்ளிட்ட கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் திட்டத்திற்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டுள்ள அரசாங்க தரப்பில் இருக்கும் கட்சிகளின் தலைவர்களுடன் முக்கிய கலந்துரையாடலொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.