மகாத்மா காந்தியின் 73 ஆவது நினைவு தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக உள்ள அவரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைதூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் கே.பாலசந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், யாழ்ப்பாணம் மாநகர முதலவர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.