
இலங்கையருக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவையாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று காலை ஆரம்பமானது.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் தடுப்பூசியை தங்களுக்கு ஏற்றி அந்த நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தனர்.
வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்களுக்கும் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 5,820 மருத்துவ சேவையாளர்கள், சுகாதாரத் துறையினருக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.