May 25, 2025 11:51:42

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைத் தமிழருக்காக உயிர்நீத்த முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

இலங்கையில் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தி சென்னையில்  தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தமிழ் ஆராய்ச்சி படுகொலை நினைவுத் தூபியில் இந்த நினைவு தின நிகழ்வு நடைபெற்றது.

பத்திரிகையாளரான முத்துக்குமார், 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற போராட்டமொன்றில் இலங்கையில் இனப் படுகொலைகளை கண்டித்தும், அதனை இந்திய அரசாங்கம் தடுத்த நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தியும் தன்னைத் தானே தீயிட்டுக்கொண்டு உயிரிழந்திருந்தார்.