July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சோளப் பயிர்களை தாக்கும் ஒரு வகை வைரஸ்: அம்பாறையில் விவசாயிகள் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் சோளப் பயிர்ச் செய்கை ஒருவகை வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொருளாதார ரீதியில் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

குறிப்பாக கல்முனை, நீலாவணை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, திருக்கோவில், சம்மாந்துறை , காரைத்தீவு , மாவடிப்பள்ளி, போன்ற பிரதேசங்களில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது.

இம்முறை சோளப் பயிர்களில் சுமார் 100 க்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் படைப்புளு தாக்கத்தின் பரவல் காணப்படுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த விவசாய திணைக்களத்தின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது இச்செய்கையில் இனந்தெரியாத வைரஸ் தாக்கங்கள் அதிகரித்துள்ளதுடன் சோளத்தாவரத்தின் இலைகளிலும் பூக்களிலும் அவதானிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.