November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து கொக்கலை சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், மேலதிக சிகிச்சைக்காக நேற்று பகல் கொழும்பு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் நேற்று இரவு அமைச்சர் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தற்போது சுகாதார அமைச்சரின் கணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.