இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணிகள் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றது.
இதன்படி இன்று காலை கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் இராணுவ வீரர்கள் மூவருக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து ஐடிஎச் வைத்தியசாலை உள்ளிட்ட 5 வைத்தியசாலைகளில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
ஐடிஎச் வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம அங்கு முதலாவது தடுப்பூசியை ஏற்றிக்கொண்டார்.
இந்தியாவின் வெக்சின் மைத்ரி திட்டத்தின் கீழ் அன்பளிப்பு செய்யப்பட்ட 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசிகள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், அவற்றை இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்திருந்தார்.