January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா

File Photo

பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு வவுனியாவிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 சந்தேக நபர்களில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயங்காரவாத செயற்பாடுகள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய தடுத்த வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களுக்கே இவ்வாறாக தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே அவர்களுக்கு தொற்று இருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அங்கு பணியாற்றும் அதிகாரிகளை தனிமைப்படுத்துவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கையெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.