January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுதந்திர தினத்தில் நீதி கோரி போராட்டம் நடத்த காணாமல் போனோரின் உறவினர்கள் தீர்மானம்

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தையொட்டி பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் நீதி கோரும் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி 2 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவி யோகராஜா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெப்ரவரி 4 ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்த தீர்மானித்துள்ளதாகவும், இதில் கலந்துகொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.