
இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நூதன சப்ததள மற்றும் பஞ்சதள இராஜகோபுர கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
ஶ்ரீ நாகேஸ்வரி சமேத நாகலிங்க பெருமான் ஆலய நுழைவாயிலில் அமைக்கப்பட்ட சப்ததள இராஜகோபுர கும்பாபிசேகமும் நாகதம்பிரான் ஆலய நுழைவாயிலில் அமைக்கப்பட்ட பஞ்ததள இராஜகோபுர கும்பாபிசேகமும் இன்று காலை நடைபெற்றது.
உரிய சுகாதார நடைமுறைபேணப்பட்டு நடைபெற்ற இவ்விழாவில் ஆலய நிர்வாகத்தினர், குருமார்கள், அடியவர்கள் கலந்து கொண்டனர்.