உலகளாவிய கொரோனா வைரஸ் பரவலை முறையாகக் கையாண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 10 ஆவது இடம் கிடைத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் லொவி நிறுவனம் மேற்கொண்ட ஆய்விலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவை முறையாகக் கையாண்ட நாடுகளில் முதலாம் இடத்தில் நியூசிலாந்தும், இரண்டாவது இடத்தில் வியட்நாமும் மூன்றாவது இடத்தில் தாய்வானும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
உலகின் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை போன்றவற்றை மையமாகக்கொண்டே, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா 94 ஆவது இடத்திலும், முறையே இந்தோனேசியா மற்றும் இந்தியா ஆகியன 85, 86 ஆம் இடங்களிலும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.